உலகம்

சிறைக்கு தீ வைத்த கைதிகள்; அறுவர் பலி


இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்கான விதிக்கப்பட்ட தடைகளுக்கு எதிராக  மொடெனா சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தில் 6 பேர் பலியாகியுள்ளனர்.

கைதிகளை பார்வையிடுவதற்கு அவர்களின் உறவினர்களுக்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து சிறைச்சாலையில் உள்ள கட்டடம் ஒன்றுக்கு  தீவைக்கப்பட்டதையடுத்து இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

குடும்பங்களின் வருகைக்கு தடை விதிக்கப்பட்டதால், ஆத்திரமடைந்த கைதிகள் நேற்று மொடெனாச் சிறைக்கு தீ வைத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கைதிகளின் போராட்டத்தை தணிக்க, அதிகாரிகள் முயன்ற  சந்தர்ப்பத்தில் ஆறு கைதிகள் உயிரிழந்துள்ளனர். மூன்று பேர் வெவ்வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலை அடுத்து, கடுமையான புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டதையடுத்துஇ 60 கைதிகள் அடங்கிய குழு மொடெனாவில் உள்ள சிறைக்கு தீ வைத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் பரவல் கண்டறியப்பட்ட வடக்கு இத்தாலியில் சிறைக்கு வெளியே கூடியிருந்த, கைதிகளின் உறவினர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது.