இலங்கை

சிறுத்தைப் புலியை வேட்டையாடியவர் எதிர்வரும் 12 ம் திகதி வரை விளக்கமறியலில் !

நோர்வுட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா டில்லரி கீழ் தோட்டப் பகுதியில்,
சிறுத்தைப் புலியினை வேட்டையாடி இறைச்சியை விற்பனை செய்த நபரை
எதிர்வரும் 12ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதிமன்ற
நீதவான் ஜெயராம் ட்ரொஸ்க்கி உத்திவிட்டுள்ளார்

குறித்த சந்தேக நபர் இன்று ஹட்டன் நீதிமன்ற நீதவான் முன்னிலையில்
ஆஜர்படுத்தபட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

நேற்று ஞாயிற்றுக்கிழமை டிக்கோயா டில்லரி கிழ்ப்பிரிவு தோட்டப்பகுதியை
சேர்ந்த நபர், டில்லரி வனப்பகுதியில் சிறுத்தைப் புலியினை வேட்டையாடி
இறைச்சியை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் நோர்வுட் பொலிஸாருக்கு
கிடைக்க பெற்ற தகவலுக்கு அமைய இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்

குறித்த சந்தேக நபர் வழங்கிய தகவலையடுத்து புதைக்கப்பட்டிருந்த சிறுத்தைப் புலியின் தலை மற்றும் கால்கள் மீட்கப்பட்டன.அத்துடன் விற்கப்பட்டிருந்த இறைச்சியும் மீட்கப்பட்டது.

-நோட்டன் பிரிட்ஜ் நிருபர்