சினிமா

சிம்புவின் வீட்டுக்கு முன்னால் இரசிகர்கள் போராட்டம்

தமிழ் சினிமாவின் இளம் நடிகர் சிம்புவின் வீட்டு வாசல் முன்பு அவரது ரசிகர்கள் நின்று போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகர் சிம்புவின் நடிப்பில் இயக்குநர் சுசீந்தரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஈஸ்வரன். இப்படம் மிகக்குறைந்த காலத்தில் படமாக்கப்பட்டுள்ளது.

இதனால் ரசிகர்கள் ஆர்வமுடன் படத்தை பார்க்க உள்ளனர். வரும் 13 ஆம் திகதி விஜய்யின் மாஸ்டர் படமும் இப்படமும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளன.

இந்நிலையில் சிலம்பரசன் வீட்டு முன்பு அவரது ரசிகர்கள் குவிந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது ரசிகர்கள் மன்றத்தில் நிலவிவரும் குழப்பத்தால் நிரந்தர முடிவை எடுக்கமுடியாத சூழல் உள்ளதால், சிம்பு ரசிகர் மன்றத்தில் அகில இந்திய தலைவரை மாற்றக் கோரி அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.