இலங்கை

சிக்கியுள்ள ஐ ஜி பி !

 

ஜனாதிபதி கொலைச் சதி விவகாரத்தில் ஆராயப்பட்ட ஒலி நாடா ஒன்றில் உள்ள குரல் தற்போதைய பொலிஸ் மா அதிபரின் குரலென விசாரணைகளில் தெரியவந்துள்ளதால் பாதுகாப்புத்துறை வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து இதுவரை இரண்டு தடவைகள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு வாக்குமூலம் வழங்கியுள்ளார் பொலிஸ் மா அதிபர் பூஜித்த. கொலைச்சதி முயற்சியை அம்பலப்படுத்திய நாமல் குமாரவை பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக்கவிற்கு அறிமுகப்படுத்தியவர் பூஜித்தவே என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் மா அதிபர் தொடர்ந்து அழைக்கப்பட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை அவருக்கெதிரான பாரதூரமான வகையில் இருக்குமென உயர்மட்ட பாதுகாப்பு வட்டாரங்கள் சொல்கின்றன.