இலங்கை

சாரதி அனுமதிப்பத்திரம் தயாரிப்புப் பணிகளை இராணுவத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை

சாரதி அனுமதிப்பத்திரம் தயாரிப்புப் பணிகளை இலங்கை இராணுவத்திடம் ஒப்படைப்பதற்கான சாதகமான காரணிகளை ஆராய்ந்து பார்ப்பதற்கு போக்குவரத்துத் துறை அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகின்றது.

பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோருடன் நடந்த கலந்துரையாடலின்போது, இந்த விடயம் தொடர்பாக ஆராயப்பட்டதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அதற்கமைய எதிர்வரும் வருடம் முதல் இந்த நடவடிக்கையை இராணுவத்தினரிடம் ஒப்படைப்பது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, மிகக்குறைந்த செலவில் வாகனசாரதி அனுமதிப்பத்திரத்தினை இராணுவத்தினால் தயாரிக்க முடியும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரட்ண தெரிவித்துள்ளார் என்றும் இது தொடர்பாக இராணுவம் மற்றும் பாதுகாப்பு செயலாளருடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக போக்குவரத்து அமைச்சர் குழுவொன்றை நியமித்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.