Breaking News

சாய்ந்தமருது வைத்தியர் தலவாக்கலையில் கைது !

 

கல்முனை – சாய்ந்தமருதை சேர்ந்த முஸ்லிம் வைத்தியர் ஒருவர் தலவாக்கலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்

ஒரு வருடகாலமாக இயங்கிவந்த மருத்துவ நிலையம் ஒன்றின் வைத்தியர் எம்.பி.பி எஸ்.என்ற தகமையை கொண்டவர் எனக் கூறினாலும் அது உண்மையா என்பது குறித்து பொலிஸ் விசாரணைகளை செய்கிறது.

இந்த டாக்டர் கருக்கலைப்பில் ஈடுபட்டு வருவதாக குறித்த மருத்துவ நிலையத்தில் புரிந்து வந்த தாதி ஒருவர் தலவாக்கலை லிந்துலை நகரசபையின் தலைவர்அசோக்கசேபாலவிடம் அறிவித்ததையடுத்து குறித்த வைத்தியசாலைக்கு சென்ற நகரசபையின் தலைவர் மற்றும் தலவாக்கலை பொலிஸாரும் நிலையத்தின் ஆவணங்களை ஆராய்ந்தனர்

அப்போது இந்த வைத்தியர் எம்.பி.பி எஸ் தகைமையுடையவர்அல்ல என்பது பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து
தெரியவந்துள்ளது . அத்தோடு அவரிடம் இருந்த சான்றிதழ்கள் அனைத்தும் போலியாக
தயாரிக்கப்பட்டவை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

இதேசமயம் இந்த நிலையத்தில் இருந்து பெருந்தொகையான மாத்திரைகளும்
உபகரணங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர் .

கைது செய்யபட்ட வைத்தியரை நுவரெலியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-நோர்ட்டன் பிரிட்ஜ் நிருபர் கிருஷ்ணா-