விளையாட்டு

சாம்பியன் ஹலேப்பிற்கு அதிர்ச்சி கொடுத்த அமண்டா

அமெரிக்காவின் 17 வயதான டென்னிஸ் வீராங்கனை அமண்டா அனிசிவோ, ஃப்ரென்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அவர் காலிறுதியில் நடப்பு சாம்பியன் சிமோனா ஹலேப்புடன் மோதினார்.

இதில் அவர் 6-2 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

அரையிறுதியில் அமண்டா அவுஸ்திரேலியாவின் ஏஸ்லி பார்டியுடன் மோதவுள்ளார்.

இதேவேளை உலக தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள நவோக் ஜொக்கோவிக், அலெக்சாண்டர் செவ்ரெவை தோற்கடித்துக்கு ஃப்ரென்ச் ஓபனில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.