விளையாட்டு

சாதனை படைத்த அமெரிக்க பெண்கள் அணி

 

மகளிர் உலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடர் இடம்பெற்று வருகிறது.

நேற்று அமெரிக்கா தாய்லாந்து அணியை எதிர்த்தாடியது.

இதில் அமெரிக்கா 13 கோல்களைப் போட்டதுடன், தாய்லாந்து எந்த ஒரு கோலையும் பெறவில்லை.

இறுதி 16 நிமிடங்களில் மட்டும் ஆறு கோல்களை அமெரிக்க பெண்கள் அணி போட்டிருந்தது.

அலெக்ஸ் மோர்கன் ஐந்து கோல்களைப் பெற்றார்.

2015ம் ஆண்டு உலகக்கிண்ண பெண்கள் காற்பந்தாட்ட தொடரை அமெரிக்கா வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.