இலங்கை

சஹ்ரான் சாகவில்லை ? – பரபரப்பு தகவல் !

 

ஷங்ரிலா ஹோட்டலில் தற்கொலை தாக்குதலில் ஈடுபட்டு தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் ஸஹ்ரான் உயிரிழந்தமை தொடர்பில் புலனாய்வுத் துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளதாக அரச ஊடகமான டெய்லி நியூஸ் இன்று செய்தி வெளியிட்டுள்ளது .

தற்கொலைதாரிகளுடன் ஸஹ்ரான் வந்திருந்தாலும் அவர் தற்கொலை தாக்குதல் நடத்தாமல் தூர இருந்து குண்டு ஒன்றை வெடிக்கச் செய்திருக்கலாமென பாதுகாப்பு தரப்பு சந்தேகிப்பதாகவும் , தற்கொலைதாரியின் உடல் என்று சொல்லப்படுவதுடன் சஹ்ரானின் உடலமைப்பு ஒத்துப்போகாமை குறித்தும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

தாக்குதல்களை வேறு ஒரு வடிவத்தில் எங்காவது நடத்த ஸஹ்ரான் உயிருடன் இருக்கக் கூடுமெனவும் மரபணு பரிசோதனை நடத்தப்பட்டு உண்மை ஸஹ்ரான் குறித்து உண்மை கண்டறியப்படவேண்டுமெனவும் புலனாய்வுத்துறையினர் தெரிவித்ததாக அந்த செய்தியில் சொல்லப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஸஹ்ரான் தற்கொலை தாக்குதலில் உயிரிழந்ததாக அரசு அறிவித்துள்ள நிலையில் இந்த சந்தேகம் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .