Breaking News

சஹ்ரானுக்கு நெருக்கமானவர் எனக் கூறப்பட்டு வெலிமடையில் ஒருவர் கைது

 

வெலிமடை ,சில்மியாபுர ,பதுர்தீன் மாவத்தையில் 21 வயது இளைஞர் ஒருவர் வெலிமடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேசிய தவ்ஹீத் ஜமாத் தலைவர் சஹ்ரானுடனும் அந்த அமைப்பின் இதர முக்கியஸ்தர்களுடனும் தொடர்பில் இருந்தார் எனக் கூறியே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெலிமடை பொலிஸார் இவரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.