Breaking News

சஹ்ரானின் மரபணு பரிசோதனை ஒத்துப்போனது?

 

தற்கொலை தாக்குதலில் ஈடுபட்டதாக சொல்லப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் சஹ்ரான் காசிமின் மரபணு பரிசோதனை நடந்து முடிந்துள்ளதாக தெரிகிறது.

அவரது மகளின் இரத்த மாதிரியை வைத்து நடத்தப்பட்ட மரபணு பரிசோதனையில் அவரது மகளின் இரத்தத்துடன் அவரது இரத்தம் ஒத்துப்போனதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.