Breaking News

சவேந்திர மீதான பயணத்தடை – இலங்கை கடும் ஆட்சேபனை !

இராணுவத்தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அமெரிக்கா செல்ல அந்நாட்டு அரசு விதித்திருக்கும் பயணத்தடை குறித்து இலங்கை அதிருப்தி வெளியிட்டுள்ளது.

இதனை மீள்பரிசீலனை செய்யுமாறு இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ளது.( அறிக்கை இணைப்பு )

இதேவேளை தாம் அமெரிக்கா செல்ல விண்ணப்பிக்கவில்லையென்றும் இனிமேலும் விண்ணப்பிக்க உத்தேசம் இல்லையெனவும் இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.