உலகம்

சவுதியில் எண்ணெய் கட்டுமானத்தின் மீது ட்ரோன் தாக்குதல்

சவுதி அரேபியாவில் எண்ணெய் விநியோக குழாய்கள் மீது ஆயுதங்களுடனான ட்ரோன்களைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சவுதியின் கிழக்கு மாகாணத்தில் இருந்து யன்பு துறைமுகத்துக்கு எண்ணெய்யை பரிமாற்றும் குழாய்கள் மீது இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
ஏற்கனவே கடந்த தினம் சவுதிக்கு சொந்தமான எண்ணெய் தாங்கி கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
இதேவேளை இந்த தாக்குதல்களுக்கு ஐக்கிய அரபு ராச்சியம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
தீவிரவாத செயற்பாடுகளை கட்டுப்படுத்த வேண்டிய தேவையை இந்த தாக்குதல்கள் மீண்டும் உணர்த்தி இருப்பதாகவும் ஐக்கிய அரபு ராச்சியம் தெரிவித்துள்ளது.