விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட் பேரவை விருதுகள் – 2019


2019ஆம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரருக்கான, ‘சேர் கார்பில்ட் சோபர்ஸ்  விருது” இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரர் பென் ஸ்டோக்சிற்கு வழங்கப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கடந்த வருடத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கடந்த மாதம் மகளிருக்கான விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், ஆடவருக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அவுஸ்திரேலிய அணியின் பட் கமின்ஸ் ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரராகவும், ரோஹித் சர்மா சிறந்த ஒரு நாள் வீரராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவின் தீபக் சாஹர் சிறந்த இருபதுக்கு-20 வீரருக்கான விருதைப் பெற்றார்.

அவுஸ்திரேலியாவின் மார்னஸ் லபுஷான் வளர்ந்து வரும் வீரருக்கான விருதினைப் பெற்றுள்ளார்.

ஸ்காட்லாந்தின் கைலி குயெட்சர் சிறந்த இணை கிரிக்கெட் வீரராக  (டெஸ்ட் அந்தஸ்து பெறாத நாடு) செய்யப்பட்டுள்ளார்.

இந்திய அணியின் தலைவர் விராட்  கோஹ்லிக்கு கிரிக்கெட்டின் கணவான் தன்மையை வெளிப்படுத்தியமைக்காக “Spirit of Cricket’ விருது வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த நடுவராக இங்கிலாந்தின் ரிச்சர்ட் இல்லிங்வொர்த் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.