விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட் பேரவை விருதுகள்; அவுஸ்திரேலியாவிற்கு இரு விருதுகள்

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் இந்த வருடத்திற்கான வளர்ந்துவரும் கிரிக்கெட் வீராங்கனைக்கான விருது, தாய்லாந்து அணியின் ஷனிடா சுத்திருஹாங்கிற்கு வழங்கப்பட்டுள்ளது.

26 வயதான அவர் இந்த வருடம் இடம்பெற்ற இருபதுக்கு-20 உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளில் மொத்தமாக 12 விக்கெட்டுக்களை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இருபதுக்கு-20 போட்டிகளின் சிறந்த வீராங்கனையாக அவுஸ்திரேலிய அணியின் அலிசா ஹெலி தெரிவாகியுள்ளார்.

இந்த வருடத்திற்கான சிறந்த ஒருநாள் அணி வீராங்கனையாக, மற்றுமொரு அவுஸ்திரேலிய வீராங்கனை எல்லைஸ் பெரி தெரிவாகியுள்ளார்.

சகலதுறை வீராங்கனையான இவர், இந்த வருடத்தில் 73.50 என்ற சராசரியில் 441  ஓட்டங்களைப் பெற்றுள்ளதோடு, 21 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியுள்ளார்.