இலங்கை

சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் தலைவர் ஜனாதிபதியை சந்தித்தார்..

 

இலங்கைக்கு வருகை தந்திருக்கும் சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் தலைவர் ஷஸாங்க் மனோகர் நேற்று ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்.

இலங்கை கிரிக்கெட் துறையின் வளர்ச்சிக்காக அனைத்து ஒத்துழைப்புகளை வழங்கத் தயாராக உள்ளதாக அவர் ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டமைக்காக கிரிக்கெட் சபையின் தலைவருக்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்ததுடன், கிரிகெட் போட்டிகளை அரசியல் தலையீடுகளின்றி முன்னெடுத்துச் செல்வதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா உள்ளிட்ட அதிகாரிகள் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.