விளையாட்டு

சர்ச்சையில் நெய்மர்

 

 

பிரேசில் உதைபந்தாட்ட வீரர் நெய்மருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று, பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் கழகம் அறிவித்துள்ளது.

இந்த கழகத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள நெய்மர், நேற்றைய பயிற்சிகளில் பங்குபற்றி இருக்கவில்லை.

அவர் தமது முன்னைய கழகமான பார்சிலோனாவுடன் இணைந்துக் கொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்ற நிலையிலேயே பயிற்சிகளிலும் கலந்துக்கொள்ளாதிருந்தார்.

இதனை அடுத்து அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.