விளையாட்டு

சர்ச்சைக்கு மத்தியிலும் பட்டத்தை தக்கவைத்துக் கொண்ட வில்டர்

அமெரிக்க அதிபார குத்துச்சண்டை வீரர் டியோன்டாய் வில்டர், உலக குத்துச் சண்டை கவுன்சிலின் அதிபார குத்துச் சண்டை வீரர் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டார்.

இதற்கான போட்டி நியுயோர்க்கில் நடைபெற்றது.

மற்றுமொரு அமெரிக்கரிக்கான டொமினிக் ப்ரீஸ்ல், வில்டரை எதிர்த்து மோதினார்.

போட்டியின் ஆரம்பத்தில் டொமினிக், வில்டரை குத்தி கயிற்றில் தள்ளிய போதும், பின்னர் வில்டர் கொடுத்த வலது கை குத்தின் மூலம் நொக்கவுட் முறையில் தோல்வி அடைந்தார்.

இந்த வெற்றியுடன் வில்டர் 42 போட்டிகளுள் 41ல் வெற்றிப் பெற்றிருப்பதுடன், ஒன்றை சமநிலையில் நிறைவு செய்திருக்கிறார்.

‘குத்துச்சண்டை போட்டி ஒன்றின் போது ஒருவரை கொலை செய்ய வேண்டும்’ என்று கருத்து வெளியிட்டமைக்காக வில்டர் தொடர்பில் விசாரணை நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.