விளையாட்டு

சர்ச்சைக்குரிய ‘சுப்பர் ஓவரின் பௌண்டரி’ முறைமையில் மாற்றம்சர்ச்சைக்குரிய சுப்பர் ஓவரின் பௌண்டரி (பெறப்படும் நான்கு ஓட்டங்களின் எண்ணிக்கையை வைத்து தீர்மானிப்பது) விதிமுறையில்,  மாற்றம் கொண்டுவர, சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டி பல சர்ச்சைகளுக்கு மத்தியில் முடிவுக்கு வந்தமைக்கு இந்த சுப்பர் ஓவரின் பௌண்டரி முறைமை காரணமாக அமைந்தது.

நியுசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ண, இறுதிப் போட்டி சமனிலையில் முடிந்தும், பௌண்டரிகள் அடிப்படையில், இங்கிலாந்து அணி சாம்பியனாக அறிவிக்கப்பட்டது.

இந்த தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாhது என்ற அடிப்படையில் தொடர்ச்சியாக கருத்துக்கள் வெளியிடப்பட்டு வந்தன.

இவ்வாறான நிலையில், சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நிர்வாகக் குழு சந்திப்பு  இடம்பெற்ற நிலையில், இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய, இனிவரும் காலங்களில் சர்வதேச கிரிக்கெட் பேரவையால், நடத்தப்படும் சர்வதேச ஒரநாள் மற்றும் இருபதுக்கு-20 தொடர்களில் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில், சுப்பர் ஓவரpலும், போட்டி சமனிலையில் முடிவடைந்தால், போட்டியின் முடிவு பௌண்டரிகள் அடிப்படையில் முடிவு அறிவிக்கப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் சுப்பர் ஓவரின் மூலம் சமனிலையாகுமாயின்இ பட்சத்தில், ஒரு அணி அதிக ஓட்டங்களை பெறும் வரையில் சுப்பர் ஓவர்கள் தொடர்ச்சியாக வழங்கப்படும் என்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் நடத்தப்படும் தொடர்களின் லீக் போட்டிகளிலும் சுப்பர் ஓவர் வழங்கப்படும் என்ற புதிய விதிமுறையையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் லீக் போட்டிகள் சமனிலையில் முடிவடையுமாயின், அணிகளுக்கு இடையில் புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்படும். எனினும் புதிய விதிமுறையின் படி, சுப்பர் ஓவரின் மூலம் அனைத்து போட்டிகளுக்கும் முடிவுகள் கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், லீக் போட்டி சுப்பர் ஓவரpல் சமனிலையில் முடிந்தால் மீண்டும் சுப்பர் ஓவர்கள் வழங்கப்பட மாட்டாது எனவும் மாறாக, ஏற்கனவே உள்ள விதிமுறையின் படி, அதிக பௌண்டரிகளை பெற்ற அணி வெற்றிபெற்ற அணியாக அறிவிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.