சரத்குமாரின் சிறை தண்டனை நிறுத்திவைப்பு: ராதிகாவுக்கு பிடியாணை
காசோலை மோசடி வழக்கில் சரத்குமாருக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. நடிகை ராதிகாவுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காசோலை மோசடி வழக்கில் காலையில் விதிக்கப்பட்ட தண்டனையயை எம்.பி. எம்.எல்.ஏ.க்களுக்கான வழக்குகளை விசாரணை செய்யும் சிறப்பு நீதிமன்றம் பிற்பகலில் நிறுத்திவைப்பதாக உத்தரவிட்டது.
காசோலை மோசடி வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை பெற்ற ராதிகா நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில் பிடியாணை பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதாக சரத்குமார் தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், மேல்முறையீடு செய்வதற்கு ஏதுவாக சரத்குமார், பங்குதாரர் லிஸ்டன் ஸ்டீபனின் தண்டனை 30 நாட்களுக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இது என்ன மாயம் என்ற திரைப்படத்தை தயாரிப்பதற்காக ரேடியண்ட் நிறுவனத்திடம் பணம் பெற்ற விவகாரத்தில், பணத்தை திரும்ப அளிக்காததால், ரேடியண்ட் நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ப்பட்டது.
2014ஆம் ஆண்டு 1.50 கோடி ரூபா ரேடியன்ஸ் நிறுவனத்திடம் மேஜிக் ப்ரேம்ஸ் நிறுவனம் சார்பில் கடனாக பெற்றுள்ளார். கடனைத் திருப்பி அளிப்பதில் மேஜிக் ப்ரேம்ஸ் நிறுவனம் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.