இலங்கை

சம்பந்தனை சந்தித்தார் சஜித் – பிடிகொடுக்காமல் நழுவினார் கூட்டமைப்பின் தலைவர் !

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கும் அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்குமிடையில் முக்கியமான சந்திப்பொன்று நேற்றிரவு நடைபெற்றது.

அமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.அமைச்சர் மங்களவும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டார்.

வரும் ஜனாதிபதித் தேர்தல் குறித்தும் அதில் போட்டியிட தாம் தயாராக இருப்பது பற்றியும் அமைச்சர் சஜித் இதன்போது சம்பந்தனுக்கு எடுத்துக் கூறினார்.ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக நியமனம் பெறாத பட்சத்தில் பொதுவேட்பாளராக போட்டியிடுமாறு தமக்கு பல தரப்பாலும் அழைப்பு விடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ள சஜித் ,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு தமக்கு தேவையென கேட்டுள்ளார்.

இந்த விடயங்கள் குறித்து கேட்டறிந்த சம்பந்தன் ,இந்த விடயங்கள் குறித்து கட்சியுடன் பேச வேண்டியிருப்பதாலும் ,தேர்தலொன்று அறிவிக்கப்படாத நிலையில் இது குறித்து இப்போதே அவசரப்பட்டு முடிவுகளை எடுக்க முடியாதென்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை அமைச்சர்மார் சஜித் மற்றும் மங்கள ஆகியோர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் குறித்து பேசியுள்ளமை ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவை அதிருப்தியடையச் செய்துள்ளதாக அறியமுடிந்தது.