இலங்கை

சம்பந்தனா – டக்ளஸா ? தடுமாறும் ரணில் !

சமல் ராஜபக்ச எம் பியின் வெளியேற்றத்தால் வெற்றிடமாகியுள்ள அரசியலமைப்புக் கவுன்சிலின் உறுப்பினர் பதவியில் டக்ளஸ் தேவானந்தா எம் பியை நியமிக்க எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச சிபாரிசு செய்துள்ளார்.

ஆனால் அந்த இடத்திற்கு சம்பந்தன் எம் பியை நியமிக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதமர் ரணிலைக் கேட்டுள்ளது.

என்றாலும் தேசிய அரசொன்றை அமைக்க ஏற்பாடுகளை செய்து வரும் ரணில் ,டக்ளஸ் எம் பியை இணைத்து தேசிய அரசை முன்னெடுக்க உள்ளூர விரும்புவதால் டக்ளஸை கவுன்சிலுக்கு நியமிக்கலாமென கருதுகிறார். ஆனால் டக்ளஸை உள்வாங்கினால் கூட்டமைப்பின் ஆதரவு இல்லாமல் போகுமோ என்ற அச்சமும் பிரதமருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பந்தனா – டக்ளஸா என்று தடுமாறும் ரணில் – மஹிந்த ராஜபக்சவை சந்தித்து இதுபற்றி பேச முற்பட்டுள்ளார்.

“ எனது தெரிவு டக்ளஸ் தான் . உங்களுக்கு வேறு எண்ணம் இருந்தால் டக்ளசுடன் அதைப்பற்றி பேசுங்கள்..” என்று மஹிந்த ரணிலுக்கு சொல்லிவிட்டாரென தெரிகிறது.

அதன்பின்னர் டக்ளஸ் எம் பியை சந்திக்க பிரதமர் ரணில் விருப்பு கொண்டு அழைப்பு விடுத்துள்ளார்.

ஆனால் டக்ளஸ் எம்பி அந்த சந்திப்பை தவிர்த்து வருவதாக தகவல். அரசியலமைப்பு கவுன்சிலைப் பற்றி பேசப்போய் இறுதியில் தேசிய ஆட்சியில் பங்கெடுக்க பிரதமர் கோரினால் என்ன செய்வது என்ற காரணத்தினால் தான் அவர் தயங்குவதாக தெரிகிறது.