சமோவா செல்லும் இலங்கை பளுதூக்கும் வீரர்கள்
பொதுநலவாய பளுதூக்கும் போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்குபற்றவுள்ளனர்.
இந்த மாதம் 9ம் திகதி முதல் 14ம் திகதி வரையில் சமோவாவில் இந்த போட்டிகள் இடம்பெறவுள்ளன.
2020ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான தெரிவுப் போட்டியாகவும் இது அமையவுள்ளது.
இதில் 3 இலங்கை பளுதூக்கும் வீரர்கள் கலந்துக் கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.