Breaking News

சமையல் எரிவாயு விலை குறைப்பு !

 

12.5 கிலோ லிட்ரோ எரிவாயுவின் விலையை குறைக்க வர்த்தக அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி, லிட்ரோ எரிவாயு 12.5 கிலோகிராம் சிலிண்டரின் விலையை 240 ரூபாவால் இன்று நள்ளிரவு முதல் குறைக்க எதிர்பார்த்துள்ளதாக அந்த அமைச்சு தெரிவிக்கின்றது.

அதேபோல் 5 கிலோ சிலிண்டர் 95 ரூபாவால் இன்றிரவு முதல் குறைக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.