Breaking News

சமையல் எரிவாயு தட்டுப்பாடு – மக்கள் அவதி !

 

நாடளாவிய ரீதியில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

அத்தியாவசிய தேவைகளுக்கு அப்பால் ஹோட்டல்களுக்கு தேவையான எரிவாயும் பற்றாக்குறையாக இருப்பதால் உணவுப் பொருட்களை தயாரிப்பதிலும் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது.

கடந்த வாரம் முதல் இந்த தட்டுப்பாடு நிலவினாலும் கூட நேற்றுமுதல் கைவசம் இருந்த எரிவாயு தொகைகளும் நிறைவடைந்துவிட்டதாக எரிவாயு விற்பனை முகவர்கள் தெரிவித்தனர்.

இந்த வார இறுதிக்குள் இந்த தட்டுப்பாடு நிலைமை சீர்செய்யப்படுமென சொல்லப்படுகிறது.