சமூக ஊடகங்கள் மீதான தடைக்கு எதிர்ப்பை வெளியிட்டார் அமைச்சர் கிரியெல்ல !
“சமூக ஊடகங்கள் தடை செய்யப்பட்டதால் ஒரு தனிமை உணர்வு ஏற்படுகிறது. இப்படி தடை விதிக்கப்படுவதை ஏற்க முடியாது ”
இவ்வாறு இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல . அவர் மேலும் கூறியதாவது ,
நான் அதிகாலையில் அனைத்து சமூக ஊடகங்களையும் பார்ப்பேன். என் மீது செய்யப்படும் விமர்சனங்களையும் பார்ப்பேன்.இன்று பார்த்தபோது ஒன்றுமே செயற்படவில்லை.இதனால் ஒரு தனிமை உணர்வு ஏற்பட்டது.இவற்றை அனுமதிக்க முடியாது.
நாட்டில் இப்போது ஜனாதிபதி இல்லாவிட்டாலும் பிரதமர் பொறுப்புக்களை கவனிப்பார் .
என்றும் குறிப்பிட்டார் அமைச்சர் கிரியெல்ல