விளையாட்டு

சமூகவலைத்தளங்களில் சாதனை படைத்த விராட் கோலி

 

இந்திய கிரிக்கட் அணித் தலைவர் விராட் கோலி சமுக வலைத்தளங்களில் மொத்தமாக 100 மில்லியன் ஃபொலோவர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

பேஸ்புக்கில் 37 மில்லியன் இரசிகர்களையும், டுவிட்டரில் 29.5 மில்லியன் இரசிகர்களையும் கொண்டுள்ள அவர் இன்ஸ்டக்ராமில் 33.6 மில்லியன் இரசிகர்களையும் கொண்டுள்ளார்.

இதன்மூலம் மூன்று தளங்களிலும் மொத்தமாக 100 மில்லியன் ஃபொலோவர்களைப் பெற்ற முதலாவது கிரிக்கட் வீரர் என்ற சாதனையை கோலி படைத்துள்ளார்.

உலகில் சமுகவலைத்தளங்களில் அதிக ஃபொலோவர்களைக் கொண்டவராக காற்பந்து வீரர் க்றிஸ்டியானோ ரொனால்டோ உள்ளார்.

அவர் இன்ஸ்டக்ராமில் மாத்திரம் 167 மில்லியன் ஃபொலோவர்களைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது