உலகம்

சமாதானத்திற்காக காலில் விழுந்து வணங்கிய பாப்பரசர் !

தெற்கு சூடானில்  மதத் தலைவர்களுக்காக நடத்தப்பட்ட ஆன்மீக நிகழ்வில் பங்கேற்ற புனித பாப்பரசர் பிரான்சிஸ், அங்கு சமாதான முயற்சிகளை முன்னெடுக்கும் அரசாங்கத் தலைவர்களின் பாதங்களை வணங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

தென் சூடானுக்கு முன்னதாக பயணம் செய்யவிருந்த பாப்பரசரின் விஜயம் பிற்போடப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் பேசிய பாப்பரசர் அமைதியை ஏற்படுத்தும் முயற்சிகளில் பின்னடைவு ஏற்பட்டாலும் யாரும் மனம் தளராமல் முன்னெடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.