Breaking News

சமல் – குமார் வெல்கம சுயேட்சையாக போட்டியிட முஸ்தீபு !

 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுவதற்கான அனுமதியை பாராளுமன்ற உறுப்பினர்களான சமல் ராஜபக்ச ,குமார் வெல்கம ஆகியோர் சபாநாயகரிடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரஜாவுரிமை வழக்கில் அவருக்கு எதிராக தீர்ப்பு வருமாயின் சமல் ராஜபக்ச தேர்தலில் போட்டியிடுவார்.அதேபோல ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தேர்தலில் தனி வேட்பாளரை நிறுத்தாத பட்சத்தில் குமார் வெல்கம சுயேட்சையாக தேர்தலில் போட்டியிடுவாரென தெரிகிறது