உலகம்

சமபாலின திருமணத்தை அங்கீகரித்த முதலாவது ஆசிய நாடு – தாய்வான்

சமபாலின திருமணத்தை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொள்வதற்கான சட்டமூலத்தை தாய்வான் நாட்டின் பாராளுமன்றம் வாக்கெடுப்பில் நிறைவேற்றியுள்ளது.
மூன்று பிரேரணைகள் முன்வைக்கப்பட்டு விவாதம் நடத்தப்பட்டு, அவற்றில் ஏற்றுக் கொள்ளக்கூடிய சட்ட மூலத்தை பாராளுமன்றம் இன்று நிறைவேற்றியுள்ளது.
இதன்படி சமபாலின திருமணத்தை அங்கீகரிக்கும் முதலாவது ஆசிய நாடாக தாய்வான் மாறியுள்ளது.
2017ம் ஆண்டு அந்த நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றம், சமபாலினத்தவர்கள் திருமணம் செய்துக் கொள்ள உரித்துடையவர்கள் என்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.