விளையாட்டு

சமபாலின சேர்க்கையாளர்களை விமர்சித்த வீரரை விலக்கிய அவுஸ்திரேலிய ரக்பி

அவுஸ்திரேலிய ரக்பி அணி உடனான ஒப்பந்தத்தில் இருந்து, இஸ்ரேல் ஃபோலோ நீக்கப்பட்டுள்ளார்.
அவர் கடந்த ஏப்ரல் மாதம் தமது பேஸ்புக் தளத்தில், சமபாலினத்தவர்களுக்கு நரகம் காத்திருப்பதாக பதிவொன்றை இட்டிருந்தார்.
இதனை அடுத்து உடனடியாக அணியில் இருந்து விக்கப்பட்ட அவருக்கு எதிராக 3 பேர் கொண்ட குழு ஒன்று விசாரணை நடத்தியது.
அவர் மீதான குற்றச்சாட்டு விசாரணைக்குழுவில் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவரது ஒப்பந்தம் முறிக்கப்பட்டுள்ளது.