இலங்கை

சப்ரகமுவ மாகாணத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு உபகரண பொருட்கள் வழங்கி வைப்பு

மேற்படி குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு உபகரண பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தலைமையில் நேற்று(22) கேகாலையில் அமைந்துள்ள மாகாண ஆளுநரின் உப அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு சக்கர கதிரை மற்றும் தையல் இயந்திரம் உட்பட பல்வேறு சுயதொழில் உபகரண பொருட்கள் என்பன ஆளுநரால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சப்ரகமுவ மாகாண சமூக சேவைகள் அமைச்சின் ஆணையாளர் டி.டபிள்யு.எஸ்.ராஜபக்ஷ, மாகாண கைத்தொழில் அமைச்சின் பணிப்பாளர் நர்மதா எகொடஹெர உட்பட அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்