Breaking News

சபை உறுப்பினரை வெளியேற்றினார் நோர்வூட் பிரதேச சபைத் தலைவர் !

நோர்வூட் பிரதேசசபையின் விசேட கூட்டத்தில் சபை சட்ட திட்டத்திற்கு முரனான வகையில் நடந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டில் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் ஒருவரை வெளியேறுமாறு சபைையின் தலைவர் உத்தரவிட்டார்

நோர்வூட் பிரதேசசபையின் ஏப்ரல் மாதத்திற்கான விசேட கூட்டமொன்று புளியாவத்த கேட்போர் கூடத்தில் சபைத்தலைவர் ரவி குழந்தை வேலு தலைமையில் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகியது

விசேட பிரேரணையொன்றுக்கு சபையனுமதியை பெற்றுக்கொள்ளும் வகையில் இடம்பெற்ற விசேட கூட்டத்தின்போது கடந்த மாத சபை அறிக்கை உரிய நேரத்திற்கு கிடைக்க வில்லை ஏன ஐக்கிய தேசிய கட்சியின் நோர்வூட் வட்டார உறுப்பினர் ஜனனி ஜானகி விஜேவர்தன சபையின் தனது எதிர்ப்பினை முன்வைத்த நிலையிலே சபைத்தலைவருக்கும் உறுப்பினர் ஜனனிக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் சபை தலைவரினால் குறித்த உறுப்பினர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் வகையில் சபையிலிருந்து வெளியேறுமாறு உதத்தவிட்டார்

சபை நடவடிக்கையின் போது சபையிலிருந்து கடும் வாக்குவாததிக்கு மத்தியில் வெளியேறிய உறுப்பினர் ஜனனி ஊடகங்ளுக்கு கருத்து தெரிவிக்கையில்,

“” சபையின் மாதாந்த அறிக்கை மற்றும் கடித்தங்கள் நான்கு நாட்களுக்கு முன்தாக கிடைக்கபெற வேண்டும் ஆனால் நோர்வூட் சபையில் ஒரு வருடகாலமாகவே உரிய நேரத்தில் கடிதங்கள் கிடைப்பதில்லை அத்தோடு எதிர்தரப்பான ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களுக்கு சபைத்தலைவர் உரையாற்ற இடமளிப்பதில்லை சர்வதிகாரபோக்கிலே சபையை நடத்தி செல்கின்றார் இன்று சபை நடவடிக்கையின் போது என்னை வெளியேற்றிமை சட்டத்திற்கு முரனானது சபைத்தலைவர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன் ” எனத் தெரிவித்தார்

இது தொடர்பில் சபைத்தலைவர் ரவி குழந்தைவேலு கருத்து தெரிவிக்கையில்,

“” ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினரான ஜனனி ஜானகி விஜேவர்தன சபையின் சட்டங்களை மதிக்காது தொடர்ந்து நடந்துகொள்வதுடன் இதற்கு முன்னரும் குறித்த உறுப்பினரின் நடவடிக்கைகள் தொடர்பில் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்ட போதும் தொடர்ந்து சபையை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டமையினால் சபை சட்டத்திற்கு அமைய சபை நடவடிக்கையின் போது வெளியேறுமாறு உத்தரவிட்டேன் ” என தெரிவித்தார்

 

( நோட்டன் பிரிட்ஜ் நிருபர் – எம் கிருஸ்ணா )