Breaking News

சபாநாயகர் கரு அதிரடி அரசியல் முடிவு !

சபாநாயகர் கரு ஜயசூரிய அதிரடி அரசியல் தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளத் தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சித் தலைமைப் பதவியை ஏற்க கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் வலியுறுத்தி வரும் நிலையில் இந்த செய்தி வெளியாகியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையை ஏற்பதா அல்லது உட்கட்சி பிரச்சினை காரணமாக அரசியலில் இருந்து நிரந்தரமாக ஒதுங்குவதா அவரின் அரசியல் முடிவு என்பது குறித்து உடனடியாகத் தெரியவரவில்லை.