உலகம்

சனியின் துணைக்கோளான டைட்டனுக்கு விண்கலத்தை அனுப்பும் நாசா

 

சனியின் துணைக்கோளான டைட்டானில் மனித உயிர்கள் வாழக்கூடிய சாத்தியங்கள் இருக்கின்றனவா? என்பதை ஆராய்வதற்கான விண்கலம் ஒன்றை நாசா அனுப்பவுள்ளது.

2 பில்லியன் டொலர்கள் செலவில் இந்த விண்கலத்தை அனுப்பும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

2026ம் ஆண்டு பூமியில் இருந்து ஏவப்படவுள்ள இந்த விண்கலம், 2034ம் ஆண்டு டைட்டானை சென்றடையும்.

டைட்டான் துணைக்கோளில் உள்ள பல இரசாயன பொருட்கள், பூமியில் உயிரியல் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.