உலகம்

சந்திராயன்-3 திட்டத்திற்கு இந்திய அரசாங்கம் ஒப்புதல்

இந்தியாவின் சந்திராயன்-3 திட்டத்திற்கு இந்திய அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு மையமான, இஸ்ரோவின் தலைவர் சிவன் அறிவித்துள்ளார்.

“சந்திராயன்-2 திட்டத்தை போன்றே சந்திராயன்-3 இருக்கும் எனவும், ஒரு சில மாற்றங்களுடன் இது தொடர்பான அனைத்து பணிகளும் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

சந்திராயன்-2 திட்டம் வெற்றிகரமாக முடிக்கப்படாத நிலையில் சந்திராயன்-3 திட்டம் ஆரம்பிக்கபடவுள்ளது.

இதற்கிடையே விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் தமது ககன்யான் திட்டத்திற்கு நான்கு பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவர்கள் நால்வருக்கும் இந்தமாத இறுதியில் பயிற்சிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.