உலகம்

சந்திரனில் தரையிறங்கவுள்ள இந்தியாவின் இரண்டாவது விண்கலம்

இந்தியா தமது இரண்டாவது விண்கலத்தை சந்திரனில் இறக்க திட்டமிட்டுள்ளது.

சந்திராயன்-2 என்ற பெயரிலான இந்த விண்கலம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாக்கப்பட்டது.

அடுத்த மாதம் சந்திரனுக்கு அனுப்பப்படவுள்ள இந்த விண்கலம், செப்டம்பர் மாத முதற்பகுதியில் சந்திரனில் தரையிறங்கவுள்ளது.

ஏற்கனவே 2008ம் ஆண்டு சந்திரனுக்கு அனுப்பி வைக்கப்பட்ட இந்தியாவின் சந்திராயன்-1, சந்திரனின் ஓர்பிட்டில் சுற்றிவருகிறது.