உலகம்

சந்திரனில் உள்ள குழிகளின் மர்மம் துலங்கியது

சந்திரனின் மேற்பரப்பில் உள்ள குழிகள் தொடர்பான மர்மத்தை சீனாவின் சாங்ஏ-4 விண்ணாய்வு கருவி தீர்த்துள்ளதாக நம்பப்படுகிறது.
சாங்ஏ-4 கருவி கடந்த ஜனவரி மாதம் 3ம் திகதி முதல் சந்திரனின் தூரமான பகுதியில் தரையிறங்கி ஆய்வுகளை நடத்தி வருகிறது.
சந்திரனின் மேற்பரப்பில் உள்ள ஆழமான குழிகள் எவ்வாறு உருவாகின என்பது குறித்த ஆய்வுக்காக இந்த கருவி அனுப்பப்பட்டிருந்தது.
இது திரட்டியுள்ள தகவல்களின்படி, குறித்த குழிகளானது, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சந்திரனில் ஏற்பட்ட எரிகல் மழையினால் உருவாகி இருக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்த எரிகல் மழையின் பாதிப்பு அதியுச்சமாக இருந்ததாகவும், இது சந்திரனின் மையத்தில் இருந்து மூன்றாவது அடுக்கு பாறைகளான ‘மூடகம்’ வரையில் தாக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.