இலங்கை

சட்ட மா அதிபரின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கோரிக்கை

தேர்தல் காலப்பகுதியில் COVID – 19 பரவுவதை கட்டுப்படுத்துவது தொடர்பில் சுகாதார அமைச்சு வௌியிட்டுள்ள வழிகாட்டல்கள் அடங்கிய சுற்றுநிரூபம் தொடர்பில் சட்ட மா அதிபர் வழங்கிய பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

குறித்த அதிகாரங்களை பொது சுகாதார பரிசோதகர்களுக்கு வழங்குமாறு, சட்ட மா அதிபரால் சுகாதார செயலாளருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய, குறித்த அதிகாரங்கள் தமக்கு வழங்கப்படும் வரை தமது தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் எனவும் இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் கூறியுள்ளார்.

இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் கடந்த 10 நாட்களாக தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.