இலங்கை

சட்டவிரோத மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்ட மூன்று பேர் கைது


பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டியாகலை ஆற்றில்
மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த மூன்று பேர் பொகவந்தலாவ
பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொகவந்தலாவ பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொண்ட
சுற்றிவளைப்பின்போதே இந்த சந்தேக நபர்கள் மூவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

அகழ்வுக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன.