Breaking News

சட்டவிரோத மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது

 

 

 

 

 

 

 

பொகவந்தலாவ டின்சின் விவசாய பண்ணைக்குப் பின்னால் அனுமதிப்பத்திரமின்றி
சட்டவிரோத மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த 04 சந்தேக நபர்களை
பொகவந்தலாவ பொலிஸார் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர் .

பொகவந்தலாவ பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த நான்கு
சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதோடு சட்டவிரோத மாணிக்கக் கல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவித்தனர்

கைதுசெய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களுக்கும் இன்றைய தினம் பொலிஸாரினால் பிணை வழங்கப்பட்டுள்ளதோடு, எதிர்வரும் 18 ம் திகதி ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

– நோர்ட்டன் பிரிட்ஜ் நிருபர் –