இலங்கை

சட்டவிரோத மாணிக்கக் கல் அகழ்வு – இருவர் கைது ; ஒருவர் தப்பியோட்டம்

 

 

 

காசல்ரி நீர்த்தேக்கத்திற்கு நீர் வழங்கும் பொகவந்தலாவ கெசல்கமுவ ஆற்றில் சட்டவிரோதமாக பாரிய மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ள அதேசமயம் ஒருவர் தப்பிசென்றுள்ளதாக அட்டன் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்

இந்த சம்பவம் இன்று மாலை ஐந்து மணிஅளவில் இடம்பெற்றுள்ளது

அட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் சென்ஜோன் டிலரி மற்றும் பொகவந்தலாவ டின்சின் பகுதிகளுக்கு இடையில் இடம்பெற்ற சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபடும் காட்சிகள் எமது கமராவில் இவ்வாறு பதிவாகியிருந்தன .

இவ்வாறு மாணிக்கல் அகழ்வினை மேற்கொண்டு வந்த பகுதியினை சுற்றிவளைத்த அட்டன்
குற்றத்தடுப்பு பொலிஸார் சந்தேக நபர்களை கைதுசெய்துள்ளதோடு மாணிக்கக் கல் அகழ்விற்கு பயன்படுத்தபட்ட உபகரணங்களையும் அட்டன் குற்றத்தடுப்பு பொலிஸார் மீட்டுள்ளனர்

இந்த சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வு நீண்டகாலமாக இடம்பெற்றுவருவதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகiளில் இருந்து தெரியவந்துள்ளது

 

( நோர்ட்டன்ப்ரிட்ஜ் நிருபர் )