இலங்கை

சட்டம் அமுலிலின்றி ஊரடங்கை கடைப்பிடிக்கும் மக்கள்

இன்று அதிகாலையிலிருந்து நாட்டில் பல பிரதேசங்களில் மக்கள் நடமாட்டம் பாரியளவில் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வாரத்தின் முதல் நாளாக இருந்தாலும் கடந்த வாரங்களில் காணப்பட்ட மக்கள் நடமாட்டத்தினை இன்று காணமுடியவில்லை.

அரசாங்கத்தினால் எதுவித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாத போதிலும் மக்கள் தமக்குத் தாமே கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டு வௌி நடமாட்டத்தினை குறைத்துக் கொண்டுள்ளமையை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

பாடசாலைகளுக்கு அரசாங்கத்தினால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள அதேநேரம், இன்றைய தினம் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கையும் பெருமளவில் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.