இலங்கை

சட்டமா அதிபர் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு விடுத்துள்ள அறிவிப்பு

நாடாளுமன்ற உறுப்பினருக்கான இருக்கையொன்று வெற்றிடமாகியுள்ளதாக சட்டமா அதிபர் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாக சட்டமா அதிபரின் இணைப்பதிகாரி, அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதன் காரணமாகவே இவ்வாறு நாடாளுமன்ற இருக்கை ஒன்று வெற்றிடமாகியுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.