இலங்கை

சஜீத் பிரேமதாசவை ஆதரித்து மருதமுனையில் முஸ்லிம் காங்கிரஸின் முதலாவது தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம்

 

சஜீத் பிரேமதாசவை ஆதரித்து மருதமுனையில் முஸ்லிம் காங்கிரஸின் முதலாவது தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் ஒன்றாய் முன்னோக்கி செல்வோம் எனும் தொனிப்பொருளில் இடம்பெற்றது

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மருதமுனை மத்திய குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக் கூட்டமானது மருதமுனை கடற்கரையில் நேற்று (18) நள்ளிரவு இடம்பெற்றது.

கல்முனை மாநகர சபை முதல்வர் ஏ.எம் றக்கீப் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீமும் விசேட அதிதியாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹாரிஷும் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

குறித்த கூட்டத்தில் மழை குறுக்கிட்ட போதிலும் ஆதரவாளர்கள் எவரும் இன்றி சிறிது நேரம் அமைச்சர் ரவூப் ஹக்கீம் உரையாற்றியதுடன் அதனை ஒளிப்பதிவு மேற்கொண்ட ஊடகவியலாளர் ஒருவர் மிரட்டப்பட்டமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

பாறுக் ஷிஹான்