Breaking News

சஜித்தின் பதுளை கூட்டத்திற்கு ரணில் வைத்தார் “செக்” – அடக்கி வாசிக்குமாறு உத்தரவு !

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பதுளையில் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டம் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ள பிரதமர் ரணில் , ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் குறித்து எவரும் மூச்சுக் காட்டக் கூடாதென உத்தரவிட்டுள்ளார்.

கட்சி இறுதி முடிவை எடுக்கும்வரை பொதுவெளியில் வேட்பாளர் விவகாரத்தை பேச வேண்டாமென ரணில் பணித்துள்ளார்.

பிரதமரின் இந்த உத்தரவையடுத்து கட்சியின் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ , அமைச்சராக பதவியேற்ற பின்னர் சஜித் முதன்முறையாக பதுளை வருவதால் அவருக்கு வரவேற்புக் கூட்டமே ஞாயிறு நடக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அந்த கடிதம் இணைக்கப்பட்டுள்ளது.