விளையாட்டு

சச்சின், லாராவின் சாதனையை முறியடித்த கோலி

 

சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் விரைவாக 20000 ஓட்டங்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை, இந்திய அணித் தலைவர் விராட் கோலி இன்று படைத்தார்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் அவர் 37 ஓட்டங்களைப் பெற்றபோது இந்த சாதனையை அவர் படைத்தார்.

இதற்காக அவர் மொத்தமாக 417 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ளார்.

இதற்கு முன்னர் சச்சின் மற்றும் லாரா ஆகியோர் இந்த சாதனையை தம்வசம் வைத்திருந்தனர்.

அவர்கள் மொத்தமாக 453 இன்னிங்ஸ்களில் விளையாடி 20000 ஓட்டங்களை கடந்திருந்தனர்.