இலங்கை

சங்கிலிய மன்னனுக்கு நந்திக்கடலில் தர்ப்பணம் கொடுப்பு !

– வன்னி செய்தியாளர் –

யாழ்ப்பாண இராச்சியத்தின் இறுதித் தமிழ் மன்னன் சங்கிலிய மன்னனின் 400 ஆவது சிரார்த்த தினம் இன்று காலை முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் உள்ள நந்திக்கடலில் தர்ப்பணம் கொடுக்கப்பட்டுள்ளது.

சங்கிலிய மன்னன் சிரார்த்த தினம் வைகாசி தேய்பிறை எட்டாம் நாள் இன்று முல்லைத்தீவு மாவட்ட சிவசேனை அமைப்பின் ஏற்பாட்டில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் நந்திக்கடல் கரையில் தர்ப்பணம் கொடுக்கப்பட்டு நினைவிற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது தர்ப்பணம் செய்யப்பட்டு பிண்டம் நந்திக்கடலில் கரைக்கப்பட்டுள்ளது.