விளையாட்டு

சக்கிப் அல் ஹசன் காயமடைந்தார்.

 

பங்களாதேஷ் கிரிக்கட் அணியின் துடுப்பாட்ட வீரர் சக்கிப் அல் ஹசன் காயம் காரணமாக அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் இருந்து வெளியேறினார்.

இந்த போட்டியின் 36வது ஓவரில் 50 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் அவருக்கு இடுப்பு பகுதியில் வலி ஏற்பட்டது.

பின்னர் வைத்திய ஆலோசனையின் படி போட்டியில் இருந்து இடைவிலகினார்.

உலகக்கிண்ண தொடர் நெருங்குகின்ற நிலையில், அவரது உடல்நிலை குறித்து மிகுந்த அவதானம் செலுத்தப்படுவதாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.