விளையாட்டு

கோல்டர் நைலின் துடுப்பாட்டத்தால் 288 ஓட்டங்களைப் பெற்றது அவுஸ்திரேலியா

 

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான உலகக்கிண்ண லீக் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 49 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 288 ஓட்டங்களைப் பெற்றது.

போட்டியின் ஆரம்பத்தில் அவுஸ்திரேலிய அணி பின்தங்கிய நிலையில் இருந்த போதும், ஸ்டீவ் சுமித் மற்றும் நாதன் கோல்டர் நைல் ஆகியோரின் அதிரடி துடுப்பாட்டத்தின் மூலம் இறுதி நேரத்தில் சிறந்த ஓட்டப் பெறுமதியை பதிவு செய்து.

சுமித் 73 ஓட்டங்களைப் பெற்றதுடன், கோல்டர் நைல் 92 ஓட்டங்களைப் பெற்றார்.